welcome

உங்கள் வருகைக்கு நன்றி

Fencemen எல்லையற்று விரிவாகி தொடரும் செயல்பாடாகும் ஏனென்றால் மேலே குறிப்பிட்டுள்ள செயல்பாடுகளில் எதாவது ஒன்றிரண்டு செய்து வருபவர்கள் இந்நிறுவன கூட்டமைப்பில் தம்பகுதி உற்பத்தி விற்பனையகமாக Franchaise Partner சேர்ந்து கொள்ளலாம். இதன் முழுமையான நோக்கம் பயனாளர்களுக்கு தேவையுள்ள வேலி வலைகளை அதன் தேவைக்கு ஏற்ப கொண்டு சேர்ப்பதாகும்.

நம் தேசப்பிதா காந்தி மகானின் வாக்குப்படி வாடிக்கையாளர் என்பவர் FENCEMEN அமைப்பின் முக்கியமான அங்கமாகும். அவர்களைத்திருப்தி செய்ய முயல்வதே நம் எல்லை நோக்கமாகும். இந்நோக்கம் நம் எல்லோருடைய இடைவிடாத கூட்டு முயற்சி செயல்பாடுகளாலேயே சாத்தியம். நம் கொள்கையான “தேவைக்கு ஏற்ற வலை வலைக்கேற்ற விலை” என்ற கருத்திற்கொப்ப நம் செயல்பாடுகளும் வெளிப்படைத் தன்மையானதாகவே இருக்கும். நாம் பயனாளர்களுக்கு சரியான பொருளுக்கு சரியான விலை என்பதில் நேர்மையாக இருப்போம்.

நோக்கம்

நமது நிறுவனத்தின் நோக்கம் என்பது பங்கு தாரர்களாகிய நம் கூட்டு முயற்சியின் மூலம் கடை நிலை பயனாளிகளை திருப்தி படுத்துவது மற்றும் நம்முடைய கொள்கையில் உள்ள வெளிப்பட்டுத் தன்மையின் மூலம் வேலி வலை பற்றிய தெளிவான விவரங்களை இறுதிநிலை பயனாளியிடம் கொண்டு சேர்ப்பது

குறிக்கோள்

நாங்கள் மிகவும் நேர்மையாக சரியான விலைக்கு தரமான பொருளை எங்களுடைய பயனாளிகளுக்கு கொடுப்பது மற்றும் பல தரப்பட்ட தரமான மூல பொருட்கள் மேலும் தயாரித்து பயன்படுத்த தயார் நிலையில் உள்ள பொருட்களை சரியான செய்முறை வரையருடன் கூடிய ஆய்வக சோதனை சான்றிதழுடன் எங்களுடைய பயனாளிகளுக்கு கொடுப்பது.

நமக்கு வெளிநாட்டு தானியங்கி இயந்திர தளவாடங்கள் கொண்ட கட்டமைப்பும் தரக்குறைவான மூலப்பொருள் நாகக்கம்பி பயன்படுத்துதலிலும் நம்பிக்கை இல்லை. தரமான மூலப்பொருள் கம்பிகளும் இலகுவான தயாரிப்பு முறைகளுமே பயனாளிகளை திருப்தி படுத்தும் காரணம் பயனாளர்களை சென்றடைவது இயந்திர தளவாடங்கள் அல்ல, நல்ல தரமான மூலப்பொருள்களால் தயாரிக்கப்பட்ட வேலி வலைப்பொருட்களே. நாங்கள் ஓவ்வொரு பகுதியிலுமுள்ள (Franchaise Partners) பகுதி உற்பத்தி விற்பனை கூட்டாளிகளுடன் இணைந்தே சேவை செய்ய உள்ளோம்.

நிறுவனத்தின் பெயரை மிகைப்படுத்தி காண்பித்து கம்பியின் தரத்தைச் சொல்லாமல் விடுவது பயனாளிகளை ஏமாற்றும் வித்தையாகும். நம்முடைய FENCEMEN Chain Link, Barbed Wire வலைகளில் மூலப்பொருட்களின் தரநிர்ணய சான்றும், வலைகளின் அளவுக்குறிகளும் பொதிச்சீட்டில் (PACKING SLIP) காணலாம்.

vision-mission