சங்கிலி கோர்வை வலை

இப்பொழுதெல்லாம் மக்கள் எந்தப்பொருள் வாங்கினாலும் தரமானதாகவும் உற்பத்தியாளர்களிடம் நேரடியாகவும் வாங்கவே விரும்புகிறார்கள் தரத்தை தெரிந்துகொள்ள அப்பொருளில் உள்ள தர நிர்ணய முத்திரைகள் ISI, DIN மற்றும் கையாளும் முறைப்படுத்துதலுக்குள்ள ISO 9001ஆகியவைகள் பயன்படுகின்றன.

நாமும் நாம் கையாளும் முறைகளை சீர் செய்து நடைமுறைப்படுத்த ISO 9001:2015 இணைத்துள்ளோம் என்பதை பணிவுடன் சமர்ப்பிக்கிறோம். ISO 9001 – 2015 சான்றுடன் உள்ளது

வேலி வலை இயந்திரத்திற்கு – இங்கு சொடுக்குங்கள் Vanangamudi.com

வேலி வேலைகளின் தனித்துவம் முக்கியத்துவம்

  • 2.3, 2.5, 3 mm ஆகிய கனப்பரிமான கம்பிகளில் வலைகள் கிடைக்கும்.
  • சங்கிலி கோர்வை வேலி வலையின் உயரம் 1/2 மீட்டர் முதல் 2 மீட்டர் வரை கிடைக்கும்
  • GI, PVC, SS ஆகிய கம்பிகளின் (Chain Link Fence) சங்கிலி கோர்வை வலை கிடைக்கும்.
  • சங்கிலி கோர்வை வேலி வலையின் நீளம் சாதாரணமாக 100 அடி அல்லது 30 மீட்டர் தங்கள் தேவைக்கு ஏற்பவும் தயாரித்தளிக்கப்படும்
  • முள் கம்பிகளும் கூடுதல் GSM உள்ள கம்பியாலானது கிடைக்கும், பொதிச்சீட்டில் (Packing Slip)-ல் குறிப்பிடப்பட்டிருக்கும்.
  • 2 x 2, 3×3, 4×4 கண் அகலமுள்ள சங்கிலி கோர்வை வலைகளும் கிடைக்கும் .
  • ஓவ்வொரு வேலி வலை (Chain Link) சுருளிலும் பொதிச்சீட்டில் (Packing Slip) மூலப்பொருளின் தன்மை அளவு குறிப்பிடப்பட்டிருக்கும்.
  • நாங்கள் கம்பியின் விலையும் + செய்கூலியும் என்ற முறையில் சங்கிலி கோர்வை வலைகள் தயாரித்தளிக்கிறோம். சதுரடி அல்லது ரோல் கணக்கில் ஏமாற்றும் வாய்ப்பு உள்ளன.
  • வண்டி வாடகை, கூலி உபயோகிப்பாளர் பொறுப்பு.
  • பல இடங்களில் சேமிப்பு கிடங்குகள் (Ware House) உள்ளது.
  • பல பகுதிகளில் (Franchaise Partners) பகுதி உற்பத்தி விற்பனையாளர்கள் உள்ளனர்
  • சங்கிலி கோர்வை வலைச் சுருள்களில் வர்ணப்பூச்சும் (Spray Painting) செய்து தருகிறோம்.
S.NO PARTICULARS UNIT SELECTION
1 Thickness of GI wire mm 2.3 / 2.5 / 3.0
2 GI wire coating GSM 40 / 60 / 100
3 Width / Height ft 4’ / 5’ / 6’
mtr 1.25 / 1.5 / 2.0
4 Length required ft 100
m 30
5 Barbed Wire mm 2.0 / 2.5
ft 30 / 20 ft per kg
6 GI wire required kg 2.3 / 2.5 / 3.0
7 GI Binding wire kg 18 / 20 swg GI

வேலி அமைக்கும் சங்கிலி கோர்வை வலை தொழிலின் தற்போதைய நிலவரம்

  • தற்போது நிலத்தின் விலை அதிகமானதால் மனை வணிக தொழில் சிறப்புற்றிருப்பதால் சங்கிலி கோர்வை வேலி தேவை வளர்ந்து வருகின்றது.
  • கோழிப்பண்ணைத்தொழிலுக்கு இவ்வலை அவசியம் என்பதால் தேவைகள் அதிகமாக உள்ளது.
  • தற்போது பயனாளிகள் , வேலி வலை உற்பத்தியாளர்களிடம் நேரடியாக வாங்குவதில் ஆர்வமாக உள்ளார்கள்.
  • சங்கிலி கோர்வை வலையே மலிவான,புதுமையான வேலி அமைப்பாகும்
  • நாம் வேலி வலை உற்பத்தியாளரானால் பொருள்கன பரிமாண வித்தியாச இலா பத்திற்கு தகுதியாவோம்.
    பயனாளிகளுக்கு வேலி வலை தரம் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் உள்ளதை,நாம் நிவர்த்தி செய்ய முயன்றுள்ளோம்.
  • தரமான வேலிவலைகளை அதற்கு உண்டான தரச்சான்றிழ்களுடன் விற்கும்போது பயனாளிகள் பயனைடவர்கள்.
  • இனி வரும் காலங்களில் தரச்சான்றுடனும் தங்களுக்கு தேவையான அளவு, தரத்தில் வாங்கவே பயனாளிகள் விரும்புகிறார்கள்.
    பயனாளிகள் பயன்பெறுவது தாங்கள் வாங்கும் வலையின் தரத்திலும்,தேவையான அளவுகளின் மட்டுமே தவிற தயாரிப்பாளரின் மதிப்புள்ள கட்டமைப்புகளால் அல்ல.

வணங்காமுடி தொழிலகம்

  • 2007 ஆம் ஆண்டு இயந்திர உற்பத்தி வசதிகளுடன் 5MM, 6MM TMT இரும்பு கம்பி, இயந்திர உழவு கொழு முதலியவை தயாரிக்கும் உருட்டாலையாக (HOT STEEL ROLLING MILL) வணங்கமுடி தொழிலகம் தொடக்கப்பட்டது.
  • தற்பொழுது மத்திய அரசின் தென்னை நார் கயரு வாரியத்தின் (COIR BOARD) அங்கிகரிக்கப்பட்ட (https://bit.ly/2ZTyOvB) (http://coirboard.gov.in/) கயிரு இயந்திர தளவாடங்கள் தயாரித்து அளிப்பவர்களாக இயங்கி வருகிறது.
  • சங்கிலி கோர்வை வலை தயாரித்தலுக்கு தேவையான இயந்திரம், தளவாடங்களும்() தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.
  • சுருள்கம்பி (COILWIRE ) நேர் செய்து வெட்டி கொடுக்கும் (STRIGHTENING AND CUTTING) இயந்திரம் தடவாடங்கள் () தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. 5)முன்வார்ப்பு ஆலச்சுவர்கான (READY MADE COMPOUND WALL) தூண் (POST ROD) () கம்பிகளும் பலகை (SLAB ROD) () இரும்பு கம்பிகள் தயாரித்து விற்பனை செய்கிறோம்.
  • முன்வார்பு ஆலச்சுவர் என்பது சமீபகாலத்தில் அறிமுகமான சிமிண்டிலான தொழிலகங்களில் முன்வார்பு செய்து தேவையுள்ள இடங்களில் நிறுவும் முறையாகும்.

எங்கள் சங்கிலி கோர்வை வலை இயந்திரத்தின் நன்மைகள்

  • பெண்களே எளிமையாக இயக்க முடியும்.
  • ஓரு முனை மற்றும் மும்முனை மின்சாரம் இரண்டிலும் இயக்ககூடியது.
  • 2×2, 3×3, 4×4,2 ½ X 2 ½ ,3 ½ X3 ½ என்ற எந்தஅளவிலும் உள்ள வலைகள் தயாரிக்க முடியும்.
  • சாதாரண மற்றும் குளிர்விக்கும் முறையிலும் (coolant type ) முறையிலும் கிடைக்கும்
  • இது ஓரு குடிசைத் தொழில் ஆகும்.
  • இதில் நாக கம்பி,துருபிடிக்காத கம்பி (stainless steel) (p v c coated) பச்சை வலை தயாரிக்க முடியும்.
  • எந்த அகலம் நீளத்திலும் வலை தயாரிக்கலாம்.
  • சில நிமிடங்களில் அளவு மாற்றம் கம்பி மாற்றம் செய்ய முடியும்
  • முழுவதும் தானியங்கி சங்கிலி கோர்வை வலையின் விலை மிகவும் அதிகம், இதில் கம்பிகள் மாற்றம் செய்வது வலையின் அளவுகளை மாற்றுவது மிகவும் கடினம்.
  • எனவே பயனாளியின் தேவைக்கு தகுந்த வலை தயாரிப்பது சிறமம்.

எங்களின் தனிசிறப்பு

  • நீண்ட கால அனுபவமுள்ள தொழில் நிறுவனம்
  • தொழில் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் தன்மைஉள்ளது.
  • வலை உற்பத்தி பயிற்சி எங்கள் தொழிலங்கத்திலே தாங்கள் வாங்கும் இயந்திரத்திலேயே பயிற்சி அளிக்கப்படும்.
  • இந்த தொழிலில் முல பொருளான நாக கம்பி (GI WIRE)மொத்தமாக தயாரிக்கும் இடத்தில் வாங்கி பகிர்ந்து கொள்கிறோம்.
  • தொழில் நுட்பம் வெளிப்படைத்தன்மையாக உள்ளதால் ஏமாற்றுதல் இருக்காது.

எப்படி நமக்கு தேவையான வேலி தேர்வு செய்வதுவேலிகளின் வகைகள்

  • இயற்கை உயிர்வேலி
  • காரை கட்டுமான ஆலச்சுவர் (CEMENT COMPOUND WALL)
  • முன்வார்ப்பு ஆலச்சுவர்(READY MADE COMPOUND WALL)
  • சங்கிலி கோர்வை வலை வேலி
  • முள்கம்பி வேலி

உயிர்வேலி (LIVE FENCING)

உயிர்வேலி என்பது முள்வேலி மரங்களும் கால் நடை தீவன மரங்களும் மூலிகை செடிகளும் உள்ளதாகும். இதனுடைய நன்மை தீமைகளை பார்போம்.

உயிர்வேலியின் நன்மைகள்

  • இதனால் உயிர்காற்று பெருகும்.
  • உயிர்வேலி வகைகள் பெரிய பண்ணைகளுக்கு ஏற்புடையதாக இருக்கும் குறைந்த செலவே ஆகும்.
  • இதன் அகலம் குறைந்தது ஒரு மீட்டர் அல்லது மூன்று அடி தேவை.
  • கால்நடைகளுக்கான உணவு தாவரங்கள் கிடைக்கும்.
  • உயிரினபெருக்கத்திற்கு உகந்தது.
  • இயற்கை தோட்டத்திற்கும் இயற்கை விவசாயத்திற்கும் உதவும்.
  • இயற்கை பூச்சி விரட்டிக்கு உள்ள செடிகள் வளர்க்க உதவும்.
  • இயற்கையாக பறவை பூச்சி இனங்களை வளர்க்கும்.
  • இயற்கை உரம் உற்பத்தி செய்ய பசுந்தாள் இலைகள் கிடைக்கும்.
  • மூலிகை செடிகள் கிடைக்கும்.

உயிர்வேலியின் உள்ள பாதக அம்சங்கள்

  • விஷபாம்புகளும் உயிரினங்களும் வசிக்க துவங்கும்.
  • விவசாயம் செய்யுயிடத்தில் நிழல் உண்டாகும்.
  • வேலிக்கே அதிக இடம் தேவைப்படும்.
  • வளர்வதற்கு அதிக காலம் பிடிக்கும்.
  • இதற்கு தொடர்ச்சியான மழை அல்லது தண்ணீர் தேவைப்படும்.
  • அடிக்கடி பராமரிக்க வேண்டி இருக்கும்.

காரை கட்டுமான ஆலச்சுவர் (CEMENT COMPOUND WALL)

கட்டுமான பிரிவில் உள்ளதால் விலை அதிகம் ஆகும்.

முன்வார்ப்பு ஆலச்சுவர் தேர்ந்தெடுக்கும் விதம்

  • முன்வார்ப்பு கட்டிட பொருள்கள் என்பது சமீபகால புது யுக்தியாகும்.
  • இதன்படி கட்டிடத்திற்கு தேவையான பல பொருள்களை தொழிலகங்களின் முன்வார்பு செய்து கட்டிடத்தில் பயன்படுத்தும் முறையாகும்.
  • இந்த முறை கட்டிட பொருள் சேதாரத்தையும் கட்டிட வேலை ஆட்களும் வேலை நேரத்தையும் மீதப்படுத்த முடியும்.
  • முன்வார்ப்பு ஆலச்சுவர் குறைந்த அளவில் இடத்தை பிடிக்கும் தூணின் கனம் 6 அங்குலம் பலகை கனம் 2 அங்குலம். இன்று இடம் என்பது விலை மதிப்பு உள்ளது ஆகும்.
  • எனவே இடத்தை சேமிப்பது பணத்தை சேமிப்பதாகும்.

தயார் செய்யப்பட்ட கூட்டுச் சுவர்களுக்கான கம்பிகளைத் தேர்வு செய்தல்

  • முன்வார்ப்பு ஆலச்சுவரின் தூணில் பயன்படுத்தும் கம்பிகளும் பலகை பயன்படுத்தும் கம்பிகளை தேர்ந்தெடுப்பதற்கு ஏற்றவாறு மதிப்பீடு
    பக்கத்தில்(LINK) தூண் மற்றும் பலகை கம்பி வகைகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது அதன் மூலம் தேர்வு செய்து கொள்ளலாம்.
  • முன்வார்ப்பு ஆலச்சுவர்கள் பல அழகு வடிவங்களில் கிடைக்கும்.
  • தரமுள்ள ஆலச்சுவர்களை இடம் மாற்றியும் அமைத்துக் கொள்ளலாம்.
  • ஆலச்சுவர் உற்பத்தியாளர்களே நிறுவுதலும் செய்து தருவார்கள்
  • முன்வார்ப்பு ஆலச்சுவற்றின் தேவையான தூண், பலகை கம்பிகள், விலைகள் ஒன்றின் விலையுடன் பட்டியலிடப்பட்டுள்ளன, தூணுக்கு தேவையான வளையமும் வளைத்தே வழங்குகிறோம் தயவு செய்து உத்தேச மதிப்பு காணும் பக்கம் சென்று காணுங்கள்.

கம்பியின் வேலி வலையின் நாக பூச்சு கனம் தரத்தின்படி தேர்வு

  • நாக கம்பி என்பது நாக பூச்சு பூசப்பட்ட இரும்பு கம்பி ஆகும்.
  • நாக பூச்சு பூசுவதில் இரண்டு வகைகள் உண்டு
  • முலாம் பூச்சும் மூலம் (ELECTOR PLANT) மற்றும் சூட்டில் முக்கி எடுக்கும் முறை (HOT DIP) இந்த இரண்டு முறைகளின் சூட்டில் முக்கி எடுக்கும் முறை நீடித்து உழைக்கும்.
  • 40 GSM என்பது (GRAMPER SQUIRE METER) அதாவது ஓரு சதுர மீட்டர் அளவுள்ள நாக கம்பியின் பூச்சு கனம் 40 கிராம் என்பது பொருள்.
  • 100GSM க்கு மேல் இருந்தால் நமக்கு நல்லது.
  • ஒரு வேலி வலையின் உழைப்பின் காலம் நாக பூச்சு கனத்தை பொருத்து நிர்ணயிக்கப்படுகிறது.
  • சாதாரணமாக சந்தையில் கிடைக்கும் பூச்சி கனம் உள்ள கம்பிகள்.
    30 TO 40 GSM, 50 TO 90 GSM, 100 TO 120 GSM
  • FENCEMAN வேலி வலைகளின் பொதிச்சீட்டில் (PACKING SLIP) (QR CODE) முலமாக தயாரிப்பாளார் பெயர் பூச்சி கனம் அளவு கம்பியின் தரம் அனைத்தும் குறிப்பிட்டப்பட்டிருக்கும்.
  • நாங்கள் வேலி வலையின் மேல் வர்ணப் பூச்சு வேலையும் செய்து தருகிறோம். இதுவும் வலையின் உழைப்பு காலத்தை அதிகரிக்கும்.

கம்பி சங்கிலி கோர்வை வலை தேர்வு செய்யும் விதம்

  • கம்பி வேலி வலையின் பூச்சு கனம் தரத்தின் படி தேர்வு செய்தல்.
  • வேலி வலையின் கம்பியின் கனத்தை தேர்வு செய்தல்.
  • வேலி வலையின் கண் இடைவெளி தேர்வு செய்தல்
  • வலையின் உயரம் தேர்வு செய்தல்
  • வலையின் நீளத்தை தேர்வு செய்தல்

வேலி வலையின் கம்பியின் கனத்தை தேர்வு செய்தல்

  • தற்போது சந்தையில் 2.3,2.5,2.8,3 MM கனம் உள்ள நாக கம்பிகள் கிடைக்கின்றது.
  • நாக கம்பிகள் பொதுவாக 2.5,2.8, 3MM கனம் உள்ள கம்பிகள் இருப்பு வைப்பது வழக்கம்.
  • கம்பி கனமும் வேலி வலையின் உழைப்பின் காலத்தை நிர்ணயிக்கும் காரணியாக உள்ளது.
  • கனம் வித்தியாத்திற்கு விலை வித்தியசாம் இல்லை.
  • நாம் வலை சுருள் கணக்கிலோ சதுரடி கணக்கிலோ விலை கொடுத்து வாங்கும் போது நம்மால் கம்பியின் கனத்தையோ வேலி சுருளின் நீளத்தையோ நம்மால் நிர்ணயிக்க முடியாது.
  • எனவே விற்பனையாளர் அல்லது தயாரிப்பாளர் தவறு செய்ய ஏதுவாகிறது.
  • எனவே கம்பி வலை சுருள்களை எடை கணக்கிலும் ஓட்டும் அகலம் கண், அளவை பொருத்து கூலி நிர்ணயிக்கப்படுவது நியாயமாகும்.

வேலி வலையின் கண் இடைவெளி தேர்வு செய்தல்

  • பெரிய விவசாய பண்ணைகளுக்கு என்றால் கால்நடைகளிருந்து பாதுகாக்க 4 X 4 அல்லது 3X3 அளவுள்ள வலை பயன்படுத்தலாம்.
  • இரட்டை அடுக்கு வலையும் போட இயலும் அதாவது கீழ் பகுதியில் ஒரு அளவுள்ள கண் 2 அல்லது 2 ½ அடி உயரத்திற்கும் மேலே வேறு அளவுள்ள கண் என்ற விதத்தில் போட முடியும்.

வலையின் உயரம் தேர்வு செய்தல்

  • நம்முடைய தூண் கல்லுகால் அல்லது இரும்பு துளை ஏதுவாக இருந்தாலும் பூமிக்கு கீழ் 2 அடி ஆழம் பதித்து மேல் நாம் தேவைக்கு ஏற்ப உயரம் அமைத்து கொள்ளலாம்.
  • பூமிக்கு மேல் தூண் அடி உயரம் 4 அடி இருந்தால் வேலி வலை 4 அடி உயரத்திலும் 5 அடி உயரம் இருந்தால் 5 அடி வேலி வலை அமைத்துக்கொள்ளலாம்.
  • சில இடங்களில் வயல் வரப்பு மேல் வேலி கால் உண்றி வேலி வலை போடுவதற்காக இருந்தால் வேலி வலை உயரம் 3 அடி கூட அமைத்துக் கொள்ளலாம்.
  • இரண்டு அடுக்கு முறையிலும் வலை உயரம் தேர்வு செய்யலாம்.அதாவது கீழ்பக்கம் 2அடி அல்லது 2 ½ அடி உயரத்தில் 2 வலையும் மேலே 2 அடி அல்லது 2 ½ அடி உயரத்திற்கு 3 வலையும் நிறுவ முடியும் எடை கணக்கில் வாங்கும்பொழுது எந்த வகையிலும் உபயோகிப்போர் பாதிக்கப்படப் போவதில்லை.

வலையின் நீளத்தை தேர்வு செய்தல்

நாம் தேவைக்கு ஏற்ப நீளத்தில் வேலிவலை அமைத்துக் கொள்ளலாம்.

முள்கம்பி வேலி

முள்கம்பி என்பது இரண்டு கம்பிகள் பிரியாக சுற்றப்பட்டு இடையில் கம்பி முட்கள் இருக்கும். இதில் இரண்டு ரகங்கள் உண்டு ஒன்று 14X14 தரத்தில் ஒரு கிலோ விற்கு 30 அடி நீளமும் 12X12 தரத்தில் ஒரு கிலோ விற்கு 20 அடி நீளமும் கிடைக்கும்.
முள்கம்பியிலும் நாக பூச்சு கனம் வித்தியாசத்திற்கு ஏற்றார்போல் விலையும் மாறுபடும்.